ஊரடங்கு நேரத்தில் கைதானோர் எண்ணிக்கை 15,273ஆக உயர்வு – பொலிஸ் ஊடகப் பிரிவு!

Tuesday, April 7th, 2020

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேர  காலப்பகுதியினுள் 307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இக்காலப்பகுதியில் 104 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைய மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியினுள் ஊரடங்குச் சட்டத்தை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் 15 ஆயிரத்து 273 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, 3 ஆயிரத்து 855 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

Related posts: