உழைக்கும் மக்களின் பணத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் பொது மக்களுக்கு சுமையாகி விடக் கூடாது – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

அரசு நிறுவனங்களை அரசியல் மயமாக்க தான் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரச நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மாத்திரமே மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி அதற்கு அரசாங்கம் அவசியமான வருமானத்தை உருவாக்க வேண்டும், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த வேண்டும், செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடுமையாக உழைக்கும் பொது மக்களின் பணத்தின் மூலமே அரச நிறுவனங்கள் இயங்குகின்றன. எனவே அவ்வாறான நிறுவனங்கள் பொது மக்களுக்கு சுமையாகி விட கூடாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏனைய நாடுகள் போன்று இலங்கையும் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமைக்கு மத்தியில் நிறுவனங்களின் பிரதானிகள் நாடு குறித்து சிந்தித்து செயற்ட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|