வித்தியா கொலை வழக்கு: மரபணு சோதனை அறிக்கை ‎மன்றில் சமர்ப்பிப்பு!

Wednesday, May 18th, 2016

மாணவி வித்தியா கொலை வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கையை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொலிஸார் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று சமர்ப்பித்துள்ளனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா கடத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஒருவருடம் கடந்த பின் குறித்த வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதேவேளை, பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார் தப்பிச்சென்றமை உட்பட ஏனைய விசாரணை அறிக்கைகளை அடுத்த வழக்கு விசாரணைகளில் சமர்ப்பிப்பதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் மாணவி வித்தியாவின் கொலை வழக்கு விசாரணைகள் 2 தடவைகளாக இடம்பெற்று வந்தன. அதாவது முதலில் கைதுசெய்யப்பட்ட 10 சந்தேக நபர்களுக்கான விசாரணை ஒரு திகதியிலும் பின்னர் கைதுசெய்யப்பட்ட 2 சந்தேக நபர்களின் வழக்கு விசாரணை பிறிதொரு திகதியிலும் இடம்பெற்று வந்தநிலையில் எதிர்வரும் காலத்தில் இரு வழக்கு விசாரணைகளும் ஒரே தினத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் முதலாம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்து வருகிறது - ஜனாதிபதி கோட்டாபய ரா...
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூற...
19 ஆம் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்ட போது ஏற்பட்ட தவறுகளுக்கு மன்னிப்பு கோருவதாக ஜனாதிபதி ரண...

பணப்பெட்டிக்கு சோரம் போகாத தலைவனின் பாதையில் அணிதிரளுங்கள் - ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் விந்தன்!
கடந்த 10 மாதங்களில் ரஷ்யாவிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை!
பொறியியல் துறை மற்றும் நிர்மாணத்துறைகளில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண...