உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அச்சிடும் பணிகள் ஆரம்பம் – அரசாங்க அச்சுத் திணைக்கள அதிபர்!

Saturday, March 10th, 2018

நடந்துமுடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அச்சிடும் பணிகள் தற்போது இடம்பெறுவதாக அரசாங்க அச்சுத் திணைக்கள அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால், நேற்றைய தினம், குறித்த பெயர் விபரங்கள் அரசாங்க அச்சுத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் 340 உள்ளாட்சி மன்றங்களுக்காக 8 ஆயிரத்து 689 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இந்நிலையில் உள்ளுராட்சி மன்றங்களை நிறுவுவதை மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு பிற்போட்டிருப்பதாக உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தப்பா தெரிவித்திருந்தார்.

எனினும், குறித்த பணிகள் கடந்த 6 ஆம் திகதி மேற்கொள்ள முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, உள்ளாட்சி மன்றங்களை நிறுவும் பணிகள் பிற்போடப்பட்டதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

Related posts: