நாட்டைவிட்டு வெளியேறிய மோரா சூறாவளி!

Tuesday, May 30th, 2017

மத்திய வங்காள விரிகுடாவின் கிழக்கு திசையில் ஏற்பட்டிருந்த மோரா சூறாவளி, பங்களாதேஸில் கரைத்தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதனால் இந்த சூறாவளியின் தாக்கம் இலங்கையில் குறைவடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் இன்றைய தினம் வான் மேகமூட்டமாக காணப்படுவதுடன், மழை மற்றும் காற்றும் நிலைமையும் காணப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் 100 மில்லி மீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என்பதுடன், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் மோர சூறாவளி பங்களாதேஸில் கரைத்தொடுவதால் கடற்பகுதிகளில் கொந்தளிப்பு குறைந்து காணப்படும்.எனினும் புத்தளத்தில் இருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரை மற்றும் காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் – 80 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டை சுற்றிவுள்ள ஏனைய கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோ மீட்டர்வரை அதிகரிக்க கூடும் என்பதால் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.எனவே மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது

Related posts: