உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!

Friday, April 20th, 2018

கடந்த மார்ச் 20ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் இன்று (20) நிறைவடைகிறது.

இரண்டு உள்ளூராட்சி சபைகள் தவிர ஏனைய அனைத்து உள்ளூராட்சி சபைகளினதும் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அமர்வுகள் பிற்போடப்பட்ட ஹம்பாந்தோட்டை மாநகர சபை மற்றும் உறுப்பினர்கள் எண்ணிக்கையை வர்த்தமானியில் வௌியிட தாமதமான பூஜாபிட்டிய பிரதேச சபை ஆகியவற்றின் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் இதுவரை இடம்பெறவில்லை.

குறித்த இரண்டு சபைகளுக்கும் மேலதிகமாக இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மேலும் கூறியுள்ளது.

Related posts: