உள்ளூராட்சி மன்றங்களின் சில அதிகாரங்கள் குறைப்பு!

உள்ளூராட்சி மன்றங்களுக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், இம் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சில அதிகாரங்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜகத் முனசிங்க தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையால் கடந்த 1985ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்தி பணிகளுக்கான திட்டமிடலை உருவாக்குதல், விண்ணப்பங்கள் மற்றும் அனுமதிப்பத்திரங்களை பொறுப்பேற்றல் உள்ளிட்ட சில அதிகாரங்களே இவ்வாறு மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களில் பயன்பாட்டில் உள்ள தொழிநுட்ப முறைமை பழைமையாக உள்ளதால் அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதியை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
|
|