உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் மாதாந்தக் கொடுப்பனவுகள் இனி வங்கிக் கணக்குகளில்!

Friday, October 12th, 2018

உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அடுத்த மாதம் தொடக்கம் அவர்களது வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சாவகச்சேரி உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அடுத்த மாதம் தொடக்கம் வங்கிக் கணக்கில் வைப்பிடப்படவுள்ளது. உள்ளுராட்சி திணைக்கள அறிவுறுத்தலையடுத்து இந்தமாத இறுதிக்குள் தமது வங்கிக் கணக்குகளை வழங்குமாறு உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களிடம் தவிசாளர்கள் கோரியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை காலமும் உள்ளுராட்சித் தவிசாளர் உட்பட உறுப்பினர்களின் மாதாந்தபடி மாதாந்த அமர்வு தினத்தில் வழங்கப்பட்டு வந்ததெனவும் தற்போது வழிப்பறிகள், திருட்டு போன்றவை இடம்பெறுவதால் உறுப்பினர்களின் நலன்கருதி உள்ளுராட்சித் திணைக்களத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

நிதி சார்ந்த விடயங்கள் வங்கிக் கணக்குகள் ஊடாக கையாளப்பட வேண்டும் என்பது சுற்றறிக்கையில் உள்ள போதும் அது பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இனி இதனைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஆணையாளர் கூறியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் சாவகச்சேரி நகர சபையின் பெண் உறுப்பினர் ஒருவர் சபையின் சிறப்பு அமர்வில் கலந்து விட்டுத் திரும்பும்போது ஈருளிளியில் கைப்பை உந்துருளியில் வந்தவரால் அபகரிக்கப்பட்டது. அன்றைய தினம் நடைபெற்ற அமர்வின்போது மாதாந்தப்படி வழங்கப்பட்டிருக்கலாமென்ற எண்ணத்தில் வழிப்பறி இடம்பெற்றிருக்கலாமென்று சந்தேகிக்கப்பட்டது.

உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கு மாதாந்தம் தலா 15 ஆயிரம் ரூபாவும் உப தவிசாளருக்கு 20 ஆயிரம் ரூபாவும் தவிசாளருக்கு 25 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படுகிறதுறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: