உள்ளுராட்சி நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவிப்பு!

Sunday, September 10th, 2023

உள்ளுராட்சி நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள உள்ளுராட்சி நிறுவனங்களில் தற்போது சுமார் 8 ஆயிரம் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் கடமையாற்றுவதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குறித்த ஊழியர்களை நிரந்தரமாக்குவது தொடர்பான யோசனையை பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: