உறுப்பினர்களை அவமதித்தார் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர்!

Friday, September 7th, 2018

குறிகாட்டுவான் – நெடுந்தீவு போக்குவரத்து சேவையை மேற்கொள்ளும் நெடுந்தாரகை படகுச் சேவையின் நேரம் மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தவிசாளரின் எதேச்சத்தனமான நடவடிக்கை காரணமாக நடைபெறாது போனதுடன் பிரதேச சபை உறுப்பினர்களும் அவமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று நெடுந்தீவில் நடைபெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது –

இன்றையதினம் நெடுந்தீவின் பேக்குவரத்து சேவையான நெடுந்தாரகை படகுச் சேவையின் நேரமாற்றம் தொடர்பாக ஆராய்வதற்கென விசேட கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறும் என பிரதேச சபையின் செயலாளரது கையொப்பத்துடன் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் பிரதேச சபையின் செயலாளர் ஆகியோர் முதன்மை அதிதிகளாக கலந்துகொள்வர் எனவும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை குறித்த கூட்டத்திற்காக பிரதிநிதிகள் குறித்த மண்டபத்திற்கு வருகை தந்திருந்தபோது மண்டபம் பூட்டிய நிலையில் இருந்துள்ளது. காலை 10.55 மணிவரை குறித்த இடத்தில் பிரதேச சேபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் காத்திருந்த நிலையில் எந்தவிதமான ஆயத்தங்களையும் மேற்கொள்ளாது சபையின் தவிசாளரும் பிரதேச சபையின் செயலாளரும் எதுவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாது எதேச்சைத்தனமான முறையில் நடத்துள்ளனர்.

இந்நிலையால் நெடுந்தீவு பகுதியில் இன்று சிறிது நேரம் குழப்பநிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: