உர நிவாரண உதவித் தொகைகளை வழங்கும் முதலாவது கட்டம் ஆரம்பம்!

Monday, August 21st, 2017

பெரும்போகத்தில் உர நிவாரண உதவித் தொகைகளை வழங்கும் முதலாவது கட்டம் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று தேசிய உர விநியோக செயலக பணிப்பாளர் பி.புஷ்பகுமார தெரிவித்தள்ளார்.

பெரும்போக பயிர்ச்செய்கையின் போது உர நிவாரண உதவிகளை வழங்குவதற்கென அரசாங்கம் வருடாந்தம் மூவாயிரத்து 500 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. இந்த முதற்கட்டத்தின் கீழ் நுவரெலிய மற்றும் பதுளை மாவட்டங்களில்  உள்ள விவசாயிகளுக்கு உதவித் தொகைகளை பகிர்ந்தளிக்கப்படும்.

இது விடயம் தொடர்பில் விசேட கூட்டமொன்று எதிர்வரும் 25ஆம் திகதி அமைச்சர் துமிந்த திசாநாயக்கவின் தலைமையில் கண்ணொருவயில் நடைபெறும்.  மேலதிக பயிர்ச்; செய்கை தொடர்பாக உர நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று செயலகத்தின் பணிப்பாளர் பி.புஷ்பகுமார குறிப்பிட்டர்.

Related posts: