உரும்பிராய்ப் பகுதி திருமண வைபவத்தில் 19 பவுண் நகைகள் திருட்டு: சந்தேகநபர்கள் இருவர் ஒரு வாரத்தின் பின் கைது!

Thursday, July 21st, 2016

உரும்பிராய்ப் பகுதியில் திருமண வைபவம் இடம்பெற்ற வீடொன்றிலிருந்து 19 பவுண் நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரை ஒரு வாரத்தின் பின்னர் நேற்றுமுன்தினம்(19) கோப்பாய்ப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருட்டு இடம்பெற்ற தினத்தன்று சந்தேகநபர்கள் விட்டுச் சென்ற தடயத்தின் மூலமாகவே குறித்த இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இருவரும் 19 மற்றும் 20 வயதுடைய மானிப்பாய்ப் பகுதியைச் சேர்ந்தவர்களெனத் தெரிய வருகிறது.

 

Related posts: