பல கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது!

Saturday, August 14th, 2021

யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டு கடத்த முற்பட்ட 2 கிலோ கிராம் 250 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 120 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 2 கோடி ரூபாய்க்கு மேற்பட்டது எனவும் கஞ்சா போதைப்பொருளின் பெறுமதி 2 கோடியே 40 லட்சம் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

பொலிகண்டி கடற்கரை வீதியில் வைத்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த கடத்தல் கடற்படை வல்வெட்டித்துறை பொலிஸ் இணைந்து முறியடிக்கப்பட்டது என்று கடற்படையினர் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர்கள் 38, 34, 28 வயதுடைய மாங்குளம், இரணைமடு மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

கடற்படையினரின் வழமையான ரோந்து நடவடிக்கையின் போது பொலிகண்டி கடற்கரை வீதியில் வைத்து வாகனம் ஒன்றில் ஏற்ற முற்பட்ட போது குறித்த போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை கடத்த முற்பட்டனர் என்று மூவர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனும் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்கள் மூவரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் வல்வெட்டித்துறை பொலிஸ் மேலதிக விசாரணை செய்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

Related posts: