உணவுப் பாதுகாப்பு தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
Saturday, July 21st, 2018இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசனை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.
இதனடிப்படையில் அரசாங்கத்துக்கும் உலக உணவுத் திட்டத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு வரையான அரசாங்கத்தின் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கும், 2018-2022 ஆண்டு காலப்பகுதிக்குள் நாட்டின் மூலாபாய வேலைத்திட்டத்திற்கும் அமைவாக உலக உணவுத்திட்டம் உதவிகளை வழங்கவுள்ளது.
நாட்டில் பட்டினிக்கலைவு போசாக்கூட்டல் உள்ளிட்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு உலக உணவுத் திட்டம் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு பல்வேறு ஒத்துழைப்புகளை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மரக்கறிகளைத் திருடிய திருநெல்வேலி பொதுச் சந்தைக் காவலாளி கோப்பாய்ப் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
பரீட்சை அனுமதி பத்திரம் கிடைக்காதோர் இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம் - கல்வி அமைச்சு!
பதவிகளைக் கருத்திற் கொள்ளாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி!
|
|