உணவுச் சட்டத்தை மீறிய ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Saturday, January 5th, 2019

உணவுச் சட்டத்தை மீறிய ஆயிரத்து 200 க்கும் மேற்பட்டோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 நாள்களாக முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இந்த வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குறித்த சங்கச் செயலர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

உணவுச் சட்டத்தை மீறிய குற்றங்களுக்கான 12 இலட்சம் ரூபாவுக்கும் அதிக தண்டம் வர்த்தகர்களிடம் அறவிடப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்புத் தொடர்பான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: