ஈ.பி.டி.பி மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவதூறு சுமத்தப்படுகின்றது!

Monday, April 10th, 2017
நெடுந்தீவில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருப்பவருக்கும் ஈ.பி.டி.பிக்கும் எவ்விதத்திலும் சம்மந்தமில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஜேசுதாஸ் லக்சினி எனும் சிறுமியை கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்பவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் படுகொலை செய்ததான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அச்செய்தியை வெளியிட்ட சில ஊடகங்கள் ‘நெடுந்தீவில் ஈ.பி.டி.பி வன்புணர்வு அராஜகம்’ என்றும், தீர்ப்பின் பின்னர் ‘ஈ.பி.டி.பி உறுப்பினருக்கு மரண தண்டனை’ என்றும் வெளியிட்டிருந்தன.
இதுபோலவே ஆதாரமற்ற பல்வேறு செய்திகளை ஈ.பி.டி.பியுடன் தொடர்புபடுத்தி சிலர் வெளியிட்டு சுய திருப்தி காண்பதையும் நாம் அவதானிக்கின்றோம். ஈ.பி.டி.பி. மீது அவர்களுக்கு இருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இவ்வாறு செய்திகளை திட்டமிட்டு வெளியிடுவது தெளிவாகின்றது.
தமது அரசியல் குளறுபடிகளையும், அதிகாரத் துஸ்பிரயோகங்களையும் மறைப்பதற்காகவே இவ்வாறு ஈ.பி.டி.பி மீது அவதூறுகள் சுமத்தப்;படுகின்றன. தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றிவர்கள் மீது தமிழ் மக்கள் கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ள நிலையிலேயே இவ்வாறு அவதூறு செய்திகளை வெளியிட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியிலும் அவர்களின் ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றன.
எக்காலகட்டத்திலும் சமூகவிரோதிகளுக்கு ஈ.பி.டி.பியில் இடமில்லை. கொலை, கொள்ளை, கப்பம் பெறுதல் என்பவை எமது கொள்கையோ, வேலைத்திட்டமோ இல்லை. இதை ஆரம்ப காலங்களிலிருந்தே நாம் தெளிவாகவும், உறுதியாகவும் தெரிவித்து வருகின்றோம் என்பதுடன் அதில் ஈடுபடுகின்ற எவரையும் பாதுகாக்கும் எண்ணத்தை நாம் ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. எனவே இவ்வாறான சம்பவங்களுடன் ஈ.பி.டி.பியை தொடர்புபடுத்தி செய்திகளைப் பரப்புவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஈ.பி.டி.பி முன்னெடுத்த மனிதாபிமானப் பணிகளையும், அபிவிருத்திப் பணிகளையும் மக்கள் நன்கு அறிவார்கள். இன்றுவரை அர்ப்பணிப்போடும், சேவை மனப்பான்மையோடும் மக்கள் மத்தியில் நின்றவர்கள் ஈ.பி.டி.பியினர் மட்டும்தான் என்பதே எமது வரலாறாக இருக்கின்றது. அதை சகிக்க முடியாதவர்களும், எமக்கு சக போட்டியாளர்களாகக் கூட இருக்க அருகதை அற்றவர்களும், அவர்களால் தூண்டிவிடப்பட்டவர்களுமே எம்மீது அவதூறு பரப்பிக்கொண்டு இருக்கின்றார்கள்.
கடந்த காலங்களில் எம்மீது சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுக்களுடன் சம்மந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகள் தொடர்பான உண்மைகள் தற்போது வெளியாகி வருகின்றன. எம்மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் அவதூறுகளை யார் சுமத்தினாலும், உண்மைகள் வெளிப்பட்டு உண்மையான குற்றவாளிகள்  யார்? என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
ஊடகப் பிரிவு
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

Related posts:

உள்ளூராட்சித் திணைக்கள முன்பள்ளிகளில் தற்காலிகமாக பணியாற்றிய ஆசிரியர் பலர் நிரந்தர நியமனத்தை இழந்தனர...
அத்தியாவசியமற்ற அனைத்து செயற்பாடுகளையும் உடனடியாக நிறுத்துங்கள் - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெர...
நிரந்தரமாக விடைகொடுக்கிறது பிரித்தானியா - 2 ஆம் எலிசபெத் மகாராணியின் உடல் இன்று நல்லடக்கம் – இலங்கைய...