ஈ.பி.டி.பி துரித நடவடிக்கை – நயினாதீவின் உள்ளக பேருந்துப் போக்குவரத்து வேவை வழமைக்கு திரும்பியது!

Tuesday, April 6th, 2021

திருந்த வேலைகள் காரணமாக தடைப்பட்டிருந்த நயினாதீவின் உள்ளக போக்குவரத்து பேருந்து சேவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கமைவாக துரிதமாக சீர்செய்யப்பட்டு மீண்டும் தனது சேவைகளை இன்று ஆரம்பித்துள்ளது.

பேருந்திலேற்பட்ட சில திருத்த வேலைகள் காரணமாக கடந்த சில தினங்களாக குறித்த பேருந்து தனது சேவையை நிறுத்தியிருந்தது.

இதனால் நயினாதீவு உள்ளக போக்குவரத்தில் பல அசௌகரியங்களை சந்தித்துவந்த பொதுமக்கள் அது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமன  டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்க அமைவாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர்  சிவகுரு பாலகிருஸ்னன் துறைசார் அதிகாரிகளுடன் அது தொடர்பில் கலந்துரையாடியதை அடுத்து பேருந்து இன்று காலை திருத்தம் செய்யப்பட்டது.

இதையடுத்து இன்று மதியம் குறித்த பேருந்து தனது சேவைகளை வழமைபோன்று ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள குறித்த பகுதி மக்கள் தமது பகுதிக்கான சேவையை மேற்கொள்ளும் பெருந்து மிகவும் பழமை வாய்ந்ததென்றும் இதன் காரணமாகவே அடிக்கடி பழுதடைவதாகவும் சுட்டிக்காட்டியதுடன் இப்பேருந்துக்கு பதிலாக தமது பிரதேசத்திற்கென புதிய ஒரு பெருந்தை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அத்துடன் போக்குவரத்து சேவையை மீண்டும் சீர்செய்து தந்தமைகாதக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாகத்தினருக்கும் தமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: