ஈ.பி.டி.பியின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரேரணை நிறைவேற்றம்!

Wednesday, July 18th, 2018

திருத்தங்களுடன் வல்வெட்டித்துறை தீருவில் பொது பூங்கா முகப்பு பகுதியில் ஈழ விடுதலை போராட்டத்தில் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களையும் நினைவுகூரும் முகமாக பொது நினைவுத் தூபி அமைப்பதற்கான தீர்மானம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்குட்பட்ட வல்வெட்டித்துறை தீருவில் பொது பூங்கா முகப்பு பகுதியில் பொதுமக்கள் மாவீரர்கள் நினைவாக நினைவுத்தூபி அமைப்பதற்கு வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு இது தொடர்பான பிரேரணை இன்றைய சபைக் கூட்டத்தில் விவாதத்திற்கு வந்தது.

இந்நிலையில்  பொதுமக்கள் மாவீரர்கள் நினைவாக நினைவுத்தூபி அமைப்பது என்பதற்கு பதிலாக உரிமைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களையும் நினைவுகூரும் முகமாக பொது நினைவுத் தூபி அமைக்கப்பட வேண்டும் என திருத்தப்பட்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரிக்கும் என தெரிவித்திருந்த நிலையில்  குறித்த பிரேரணை திருத்தங்களுடன் இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்திற்கு ஆதரவாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இரு உறுப்பினர்கள் உள்ளிட்ட 8 பேர் ஆதரவு வழங்கியிருந்ததுடன் அதற்கு எதிராக 7 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்ததுடன் ஒரு உறுப்பினர் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: