ஈஸ்டர் தாக்குதல் : பொலிஸ் விசாரணைகள் முடிவுற்றுள்ளது – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Thursday, April 8th, 2021

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய சந்தேக நபர்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், விசாரணையைத் தொடர்ந்து 32 முக்கிய குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையைப் பெறும்வரை சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க சட்டமா அதிபர் விரும்பாததால் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு அரசாங்கத்தை குறை கூற முடியாது எனவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் சரத் வீரசேகர ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் சட்ட நடவடிக்கை எடுப்பது சட்டமா அதிபரின் கடமையாகும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அனைத்து தரப்பினரையும் சிந்திக்காமல் சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்ய முடியாது என சரத் வீரசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: