எமது தேசத்தின் பிள்ளைகள் இழந்துள்ள அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீளப்பெற்றுக்கொடுப்பதே, அரசாங்கத்தின் கடமை – சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!

Friday, October 1st, 2021

உலக சிறுவர் தினம் மற்றும் உலக முதியோர் தினமும் இன்றாகும். உலகிலே அழகிய சொத்து எதுவென கேட்கும் பட்சத்தில், அதற்கான பதிலாக சிறுவர்களையே கூற முடியும்.

போலியற்ற அழகிய சிறுவர் சந்ததியினரே உலகை பிரகாசிக்கச் செய்யும் அடையாளங்களாகும்.

வார்த்தைகள் தடுமாறும் என்றாலும், வாழ்க்கை தடுமாறாமல் வழிகாட்ட வல்லவர்கள் முதியவர்களாவர்.

இந்நிலையில் அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள்’ எனும் தொனிப் பொருளில் சர்வதேச சிறுவர் தினம் இன்று ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தற்காலத்தில் உலகம் முகங்கொடுத்திருக்கும் கொரோனா தொற்றுப்பரவலுக்கு மத்தியில், அனைத்து சிறுவர் சமுதாயத்தினதும் எதிர்பார்ப்பு களுடன் கூடிய சிறுவர் உலகத்துக்கான வரையறைகள் அதிக ரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாடசாலை வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் என்பன இன்னமும் பிள்ளைகளுக்குத் தொலைதூரமாகியுள்ளன.

எமது தேசத்தின் பிள்ளைகள் இழந்துள்ள அந்த அனைத்து எதிர் பார்ப்புகளையும், மிகவும் பாதுகாப்பாக மீளப்பெற்றுக் கொடுப்பதே, அரசாங்கத்தின் முதல் கடமையாக உள்ளதென ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related posts: