ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் உணர்வெளிச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்ட விடுதலை வித்துக்கள் தினம்!

Tuesday, June 5th, 2018

தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவு தினமும் விடுதலை வித்துக்கள் தினமும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் உணர்வெளிச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் எற்பாடு செய்யப்பட்ட  விடுதலை வித்துக்கள் தினம் இன்றையதினம் உரும்பிராயிலுள்ள பொன் சிவகுமாரனின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ள இடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகச் செயலாளர்கள் கட்சியின் பிரமுகர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டு உணர்வெளிச்சியுடன் குறித்த நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

முன்னதாக  தியாகி பொன் சிவகுமாரின் உருவச்சிலைக்கு பொன் சிவகுமாரின் சகோதரர் பொன் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கன் மலர்மாலை  அணிவித்து அஞ்சலிமரியாதை செலுத்தினர்

நிகழ்வுக்கான ஈகச்சுடரை கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து நினைவு நிகழ்வுகள்  மூத்த ஊடகவியலாளர் கோவைநந்தன் தலைமையில் நடைபெற்றன.

1 4 5 6 7 9 10 11 12

Related posts: