ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால்  ஊர்காவற்றுறை சனசமூக நிலையங்களுக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு!

Friday, January 6th, 2017

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டின் மூலம் ஊர்காவற்றுறை காந்திஜி சனசமூக நிலையம், ஞான வைரவர் சனசமூக நிலையம்,சின்னமடுமாதா சனசமூக நிலையம் ஆகிய பொது அமைப்புகளுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

குறித்த பொது அமைப்பகளின் நிர்வாகத்தினர் கட்சியின் பிரதேச நிர்வாகத்தினரிடம் விடுத்திரந்த கோரிக்கைக்கு அமைவாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஊர்காவற்றுறை பிரதேச சபை மண்டபத்தில் பிரதேச சபை செயலாளர் திரு. அமுதலிங்கம் தலைமையில் நடைபெற்ற  உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வில் சிறப்பு அதிதியாதக கலந்தகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன்  குறித்த அமைப்புகளின் நிர்வாகத்தினரிடம் உபகரணங்களை வழங்கிவைத்தார்

இந்நிகழ்வில் கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச நிர்வாக செயலாளர் மருதநயினார் ஜெயகாந்தன் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.

unnamed (2)

unnamed (3)

unnamed (1)

Related posts: