எரிபொருள் விலை அதிகரிப்பு : தனியார் பேருந்து உரிமையாளர்களை சந்திக்கிறார் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம!

Saturday, March 12th, 2022

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்துக் கட்டணங்கள் தொடர்பில், அடுத்த வாரத்தின் முற்பகுதியில் தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பேருந்து உரிமையாளர்களுக்கு, டீசல் மானியத்தை வழங்க முடியுமா என்பது குறித்து, நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக, அவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம, நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்து கட்டணத்தை திருத்துவது அல்லது டீசல் மானியம் வழங்குவது குறித்து கலந்துரையாடப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை 20 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டால், தற்போதுள்ள கட்டணத்தையே தொடர்ந்தும் பேணுவதற்கு பேருந்து உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், எரிபொருள் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளதால், இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆகவே பேருந்து உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்னர் நிதி அமைச்சருடன் இறுதி முடிவு எடுக்கப்படும் போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே நாளை சாதகமான தீர்மானத்தை வழங்காவிடின் நாளைமறுதினம்முதல் தனியார் பேருந்து சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: