ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச உப அலுவலகம் ஒன்று ஊர்காவற்துறை நகரில் திறந்து வைப்பு!

முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ள கட்சியின் ஈழ. மக்கள் ஜனநாயகக் கட்சியின் புதிய கட்டமைப்பின் ஒரு அங்கமாக மக்களுக்கான சேவைகளை இலகுபடுத்தும் வகையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்பிற்கமைய ஊர்காவற்றுறை பிரதேசத்தின் உப அலுவலகம் ஒன்று ஊர்காவற்றுறை மத்திய சந்தை கட்டடத் தொகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் கட்சியின் குறித்த பிரதேச உப அலுவலகத்தை கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் மற்றும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும் யாழ்.மாவட்ட நிர்வாகச் செயலாளருமான வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) ஆகியோர் சம்பிரதாய பூவமாக நாடாவெட்டிதிறந்துவைத்தனர்.
இந்நிகழ்வின்போது ஊர்காவற்துறை பிரதேச நிர்வாக செயலாளர் மருதயனார் ஜெயகாந்தன் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலர்கலந்து பங்குகொண்டிருந்தனர்.
Related posts:
மன்னாரையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா - 123 பேருக்கும் மேற்பட்டோருக்கு தொற்றுறுதி - இருவர் மரணம்!
இலங்கையில் 6 நாட்களில் 54 பேர் கோவிட் தொற்றால் வீடுகளில் மரணம் - பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேர...
இலங்கையின் தற்போதைய நாடாளுமன்றத்திற்கு இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தி!
|
|