இளம் கர்ப்பிணிப்பெண் படுகொலையை கண்டித்து ஊர்காவற்றுறையில் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து அமைதி ஊர்வலம்!

Friday, January 27th, 2017

ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் படுகொலையை கண்டித்து ஊர்காவற்றுறையில் இன்றையதினம் அமைதி ஊம்வலம் ஒன்று நடைபெற்றது.

பொது அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த அமைதி ஊர்வலத்திற்கு அரச மற்றும் அரச சாரா அமைப்புகள், பொது அமைப்புகள், பாடசாலை மாணவர்கள் என பல தரப்பட்டவர்களது பங்களிப்புடன் ஊர்காவற்றுறை நகரப்பகுதியில் ஆரம்பமான ஊர்வலம்  ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற் சென்றடைந்து பிரதேச செயலரிடம் ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது;

நேற்றுமுன்தினம் ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்து 7 மாத கர்ப்பிணி பெண்ணான ஹம்சிகா கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

தலையின் பின்பகுதியில் பலமாக தாக்கப்பட்டதன் காரணமாக மூளை சிதைவடைந்து அவர் உயிரிழந்துள்ளதாக பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் யாழ். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பணியாற்றுபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்திலேயே இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது.கொலை செய்யப்பட்ட பெண் நான்கு வயதுடைய பெண் குழந்தைக்கு தாய் என்பதுடன், அவர் படுகொலை செய்யப்பட்ட போது ஏழு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

16357818_1305452246160526_1520165267_o

16251448_1305452616160489_629282553_o

16388671_1305452429493841_221948090_o

16357280_1305452522827165_465423940_o

16357246_1305452512827166_194270932_o

16325505_1305452226160528_640136004_o

16325971_1305452272827190_615257294_o

16357421_1305452412827176_1459783633_o

16326176_1305452306160520_1256925273_o

16326929_1305452396160511_876861235_o

Related posts: