இலவச குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான நடமாடும் சேவை: பூநகரி மக்களுக்கு ஓர் அறிவிப்பு!

Saturday, November 20th, 2021

பூநகரியில் வீடுகளுக்கான இலவச குடி நீர் இணைப்பை வழங்குவதற்கான நடமாடும் சேவை எதிர்வரும் வியாழக்கிழமை பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் பள்ளிக்குடா நான்காம் கட்டைப் பகுதி, மட்டுவில்நாடு கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் அத்தாய், கொல்லக்குறிச்சி கிராம அலுவலர் பிரிவில் செல்லியாதீவு ஆகிய பிரதேசங்களில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

குறித்த கிராம அலுவலர் பிரிவுகளிலும் எதிர்வரும் வியாக்கிழமை உத்தியோத்தகர்கள் வீடு வீடாக வருகை தரவுள்ளனர்.

எனவே பிரதான நீர் விநியோக குழாயிலிருந்து 25 மீற்றருக்குள் புதிய நீர் இணைப்பு தேவைப்படும் பொதுமக்கள் விண்ணப்படிவத்தைபெற்று, வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலக தொலைபேசி இலக்கமான 021 2283981 தொடர்பு கொள்ளுமாறும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

000

Related posts:


காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையை மீளமைக்கும் முயற்சிக்கு தமிழ்க் கூட்டமைப்பே தடை  - அமைச்சர் ரிஷா...
நாடு முழுவதும் மின்தடை - நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு மின்சார பொறியியலாளர் சங்கத்தின் நாசவேலையாக...
ஈரானிய பாதுகாப்பு படை உறுப்பினர்கள் ஐந்து பேர் கொலை - பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ஜனாதிபதி...