அடுத்த வருடம் 4ஆம் திகதி முதல் தகவல் அறியும் உரிமை சட்டம் முழுமையாக அமுல்!

Saturday, November 26th, 2016

தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டம் அடுத்த வருடம் 4ஆம் திகதி முதல் முழுமையாக அமுல்படுத்தப்படும் என்று பாராளுமன்ற விவகார மற்றும் தகவல் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம் அரச அங்கீகாரம் பெற்ற நிர்வாக சட்டமாக மாற்றி அமைக்கப்படும் வேலைத்திட்டத்தின் இறுதி நடவடிக்கை தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.தகவல் அறியும் உரிமை தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் செயலமர்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இந்த செயலமர்வை இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.

பிரதி அமைச்சர் இங்கு உரையாற்றினார்.

பாராளுமன்ற விவகார மற்றும் தகவல் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதான இங்கு மேலும் உரையாற்றுகையில் :இந்த சட்டத்திற்கு அமைவாக அங்கீகரிக்கப்பட்ட அரச நிறுவனங்கள் மற்றும் தேசிய ஆவணங்கள் திணைக்களம் உட்பட வேறு பல அரச நிறுவனங்களும் இந்த வேலைத்திட்டத்தில் இணைந்துள்ளன. இந்த சட்டம் முழுமையாக அமுலாவதற்கு முன்னர் அதற்கான முன்னேற்பாட்டு வேலைத்திட்டங்கள் பூர்த்தி அடைய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

karu-1-1-1021x563

Related posts: