இலத்திரனியல் கடவுச்சீட்டை வழங்க துரித நடவடிக்கை – அமைச்சரவை அனுமதி!

Thursday, April 30th, 2020

இலங்கை மக்களுக்கு இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை வழங்க ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக அமைச்சர் சமர் ராஜபக்ச தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவது துரிதப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: