கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவிப்பு!

Tuesday, February 20th, 2024

கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகத்திற்காக அனுப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் இந்த ஆண்டுக்கான பாடசாலை கால அட்டவணை தற்பொழுது தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள், உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் அடுத்த இரண்டு மூன்று வாரங்களுக்குள் சுற்றறிக்கை மூலம் பாடசாலைகளுக்கு அறிவிக்கப்படும்..

அத்துடன் பாடசாலை மதிய உணவுக்காக 16 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் USAID நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மேலும், கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்கும் முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதத்தில் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் ஆதரவு அளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: