இலங்கை வான்பரப்பில் 220 விமானங்கள் – வருமானம் அதிகரிப்பு!

Thursday, December 20th, 2018

இலங்கையில் வான்பரப்பின் ஊடாக அதிகளவான விமானங்கள் பயணம் மேற்கொண்டதால் வருமானம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் காலை நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான விமானங்கள் பறந்துள்ளதாக விமான சேவை அதிகார சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த காலப்பகுதியினுள் 220 விமானங்கள் விமான எல்லையின் ஊடாகப் பயணித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

பேத்தாய் சூறாவளி காரணமாக இந்திய விமான எல்லையின் ஊடாகப் பயணிக்க வேண்டிய விமானங்கள் இலங்கையின் விமான எல்லையினுள் பறந்தமையால் இந்த வருமானம் கிடைத்துள்ளது.

இதற்கு முன்னர் கஜா புயல் காரணமாக 200 விமானங்கள் இலங்கையின் விமான எல்லையின் ஊடாகப் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: