இலங்கை வங்குரோத்து நிலையில் இல்லை – 5.5% பொருளாதார வளர்ச்சி மட்டத்தை அடைகிறது – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு!

Wednesday, January 12th, 2022

இலங்கையில் வங்குரோத்து ஏற்பட்டுள்ளதாக சிலர் சொல்வது போல் நிலைமையில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இன்னும் இரண்டு மாதங்களில் சுற்றுலாத்துறை மீண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனங்களால் இலங்கையின் தரம் தாழ்த்தப்பட்டமை வருத்தமளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊட கவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேநேரம் இந்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி நூற்றுக்கு 5.5% ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: