இலங்கை – மாலைதீவுக்கு இடையே மீண்டும் விமான சேவை!

Friday, August 27th, 2021

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கு இடையிலான விமான சேவையை செப்டம்பர் 1 ஆம் திகதிமுதல் மீண்டும் ஆரம்பிக்க இருப்பதாக எமிரேட்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொழும்புமுதல் மாலைத்தீவுக்கு இடையே செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து நாளாந்தம் பயணிக்கும் இந்த விமான சேவை, டுபாய் மற்றும் மாலைத்தீவுக்கு இடையிலும், கொழும்பிலிருந்து டுபாய் ஊடாக மாலைதீவு வரையும் பயணிக்கும்.

இந்த விமான பயணங்களுக்காக போயிங் 777 வகையான விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: