சீரற்ற காலநிலையால் மன்னார் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!

Friday, December 2nd, 2016

மன்னாரில் இருந்து காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடான மட்டக்களப்பு வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புக்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதோடு, கடும் குளிர் காற்றும் வீசி வருகிறன்றது.

இதனால் மன்னார் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த கடும் காற்று காரணமாக மரங்கள் சில இடங்களில் முறிந்து விழுகின்றன.

எனினும், குறித்த மரங்களை வீதிகளில் இருந்து அகற்ற அதிகாரிகளால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும், இதனால் இவ்வீதியால் பயணிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

heavy-rain

Related posts: