இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விசேட அறிவித்தல்!

Tuesday, March 27th, 2018

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குரிய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தேவையான எரிபொருளினை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கைபெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அதிகளவான மக்கள்வருகின்றனர்.

இந்நிலையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருட்களின் விலையை அதிகரித்தாலும், பழைய விலைக்கே எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: