இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மாயம்!

Tuesday, July 11th, 2017

அமெரிக்காவின் வொசிங்கடன் நகரில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவரது பதவிக்காலம் 2016ம் ஆண்டுடன் நிறைவடைந்தப் பின்னர், அவர் மீண்டும் நாடு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரை கைது செய்வதற்கு, சர்வதேச காவற்துறையினரின் உதவி கோரப்பட்டுள்ளதாக, அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளதுஷ இதேவேளை, குறித்த இராணுவ அதிகாரி இன்னும் இராணுவத்தில் மீள இணையாத காரணத்தால், அவர் இராணுவத்தில் இருந்து விலகிச் சென்றவராக கருதப்படுவதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனேவிரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் இராஜதந்திர கடவுச் சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடொன்றில் மறைந்துள்ள நிலையில், அவரை கைது செய்ய அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் சர்வதேச காவற்துறையினரின் உதவியைக்கோரியுள்ளதாக ராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்மேலும் அவரது சில செயற்பாடுகள் காரணமாக, காலாகாலமாக இராணுவத்துக்கு வழங்கப்பட்ட அமெரிக்காவிற்கான இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பதவி தற்போது கடற்படையினருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: