இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்பு!

Sunday, August 9th, 2020

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இன்றையதினம்  பதவியேற்றுள்ளார்.

களனி ரஜமஹா விகாரையில் மத சம்பிரதாய அனுஷ்டானங்களை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் மஹிந்த பதவியேற்றுள்ளார்

சர்வதேச நாடுகளின் ராஜதந்திரிகள் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார். இலங்கை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிக விருப்பு வாக்குகளாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இலங்கை பொதுஜன பெரமுன வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையை 25 முதல் 28 ஆக குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

19 வது திருத்த சட்டத்திற்கு ஏற்ப 30 அமைச்சர்களுக்கு மேல் அனுமதி இல்லை என்பதனால் மஹிந்த ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவும் புதிய அமைச்சரவையை 25 முதல் 28 வரை மட்டுப்படுத்தும் முடிவுக்கு வந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு மட்டுப்படுத்தப்பட்டால் ஒரு அமைச்சருக்கு கீழ் பல அமைச்சரவை பதவிகள் வழங்க வாய்ப்புள்ளது.

அந்தவகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சையும் எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது என மேலும் சச்யதிகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: