இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்!

Tuesday, January 10th, 2017

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் தொடர்பான வேட்புமனுத் தாக்கல் நேற்று(09) முதல் ஆரம்பமாகியுள்ளது.

இதன்படி தலைவர் பதவிக்கு சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா, சட்டத்தரணி அநுர மெத்தேகொட மற்றும் ஆர்.ஆர்.எஸ் தங்கராஜா ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

வேட்புமனுத் தாக்கல், மன்றாடியார் நாயகம் சுஹத கம்லத் தலைமையிலான வேட்மனு சபையால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதன்போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் பதவிக்கு தற்போது அந்த பதவியில் செற்படும் சட்டத்தரணி அமல் ரன்தெனிய இன்று வேட்மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

bar-association

Related posts: