ஜப்பான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகை!

Friday, January 5th, 2018

இலங்கைக்கான விஜயத்தை  ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டாரோ கொனோ  மேற்கொண்டு இன்று  இலங்கை வரகைதரவுள்ளார் என  வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சரின் இலங்கைக்கான பயணமொன்று 15 வருடங்களின் பின்னர் இடம்பெறுகின்றது.

மேற்படி பயணத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் சிலரையும் அவர் சந்திக்கவுள்ளார்.

ஜப்பானானது இலங்கையின் முன்னணி அபிவிருத்தி பங்காளர்களில் ஒன்றாக விளங்குகின்றதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: