இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முப்பெரும் விழா இன்று !

Sunday, October 24th, 2021

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முப்பெரும் விழா கூட்டுத்தாபன வளாகத்தில் இன்று காலை 10.30 க்கு இடம்பெற்றது.

கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார்.

கூட்டுத்தாபன தலைவரின் பிரத்தியேக செயலாளர் வீரசிங்கம் ஜெய்சங்கரின் வழிகாட்டலின் கீழ் இந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது .

கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே தமிழ் மற்றும் முஸ்லிம் சேவை பணி குழுவினரின் ஒத்துழைப்போடு இந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது

சர்வ மதத் தலைவர்களுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் அலி சப்ரி ,தோட்ட வீடமைப்பு சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் இதில் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக சிறப்பதக குறித்த நிகழ்வகள் நடைபெற்றிருந்ததாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவரின் பிரத்தியேக செயலாளர் வீரசிங்கம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளர்.

அத்துடன் குறித்த முப்பெரும் விழாவில் விசேட இசை நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: