இலங்கை உலக நீதித்திட்ட சட்டவாட்சி சுட்டெண் பட்டியலில் முன்னேற்றம்!

Friday, March 2nd, 2018

மக்களது கண்ணோட்டத்தின் அடிப்படையில் சட்டவாட்சியை மதித்து நடக்கும் நாடுகளின் பட்டியலை ஆராய்கையில் பிராந்திய அடிப்படையில் இலங்கை முன்னணியில் திகழ்கிறது.

உலக நீதித் திட்ட சட்டவாட்சி சுட்டெண் பட்டியலில் 113 நாடுகள் பட்டியலிடப்பட்டன. இந்தப் பட்டியலில் கடந்த பட்டியலுடன் ஒப்பிடும் போது இலங்கை 9 இடங்களால் முன்னேறி 68வதுஇடத்தில் உள்ளது.

மேலும் இந்தப் பட்டியலில் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது. வெனிசுவெலா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. ஆசிய நாடுகளைப் பொறுத்தவரையில் சிங்கப்பூருக்கு முதலிடம். கம்போடியா 112ஆவது இடத்திலும், மலேசியா 53வது இடத்திலும், நேபாளம் 58வது இடத்திலும் உள்ளன. இந்தியா 62வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: