இலங்கை  – அமெரிக்க படைகளுக்கிடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல்!

Friday, August 12th, 2016

இலங்கை – அமெரிக்க ஆயுதப்படைகளுக்கு இடையில் முதலாவது செயல்மட்ட இருதரப்பு பாதுகாப்புக் கலந்துரையாடல் ஒன்று கடந்த திங்கட்கிழமை தொடக்கம் இரண்டு நாட்கள் கொழும்பில் நடைபெற்றுள்ளது..

இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் கடந்த 8 மற்றும் 9ஆம் நாள்களில் நடத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடலில், அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் பல்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

இலங்கை தரப்பில், பாதுகாப்பு அமைச்சு, கூட்டுப்படைகளின் தலைமையகம், முப்படைகளின் தலைமையக அதிகாரிகள் இந்தப் பேச்சுக்களில் பங்கெடுத்தனர். செயற்பாட்டு மட்டத்தில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பாக இருநாடுகளினதும் ஆயுதப்படைகளுக்கு இடையில் நடத்தப்பட்ட முதலாவது கலந்துரையாடல் இதுவாகும்.

அமெரிக்க- இலங்கை ஆயுதப்படைகளுக்கு இடையில், இருதரப்பு பயிற்சிகள், ஒத்திகைகளை நடத்துவதற்கு, 2016ஆம் ஆண்டு தொடக்கம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான அட்டவணையை வரைவதே இந்தப் பேச்சுக்களின் நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: