இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா – 2 நாட்களில் 65 நோயாளிகள் இனங்காணப்பட்டனர் !
Monday, September 14th, 2020இலங்கையில் நேற்று மட்டும் 39 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3234 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய கடந்த 2 நாட்களில் 65 கொரோனா நோயாளிகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் தற்போது இலங்கையில் 226 பேர் மாத்திரமே சிகிக்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 16 பேரும், குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 6 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பிய 12 பேரும், எத்தியோப்பிய நாட்டை சேர்ந்த ஒருவரும், மாலைத்தீவை சேர்ந்த இருவரும், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒருவரும், செங்கடல் பிராந்தியத்தை சேர்ந்த ஒருவரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், கடந்த சில தினங்களாக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
|
|