நோயாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த நடவடிக்கை – கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் அறிவிப்பு!

Thursday, October 15th, 2020

தற்போது நிலவும் கொரோனா நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக தேசிய வைத்தியசாலைக்கு வரும் கிளினிக் நோயாளர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வைத்தியசாலை ஊழியர்கள் சிலர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த நோயாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலைக்குள் ஊழியர்களிடையே தொற்று பரவியதாக இதுவரை கண்டறிப்படவில்லை என்ற போதிலும், வைத்தியசாலைக்குள் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்தவுள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிளினிக் நோயாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நோயாளர்களின் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்களை பார்வையிடுவதற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையையும் குறைக்கவுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: