இலங்கையில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது – மேலும் ஒரு லட்சம் பைசர் தடுப்பூசிகளும் இன்று நாட்டை வந்தடைந்தன!

Monday, September 6th, 2021

அமெரிக்காவிடம் இருந்து அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட  மேலும் ஒரு லட்சம்   ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

நெதர்லாந்தில் இருந்து கட்டார் டோஹா நகருக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த தடுப்பூசிகள் இன்று அதிகாலை 1.45 அளவில் நாட்டிற்கு  கொண்டுவரப்பட்டதாக  விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வாறு கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகள் தற்காலிகமாக விமான நிலைய களஞ்சியசாலையில் பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

இலங்கையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இலங்கையில் மேலும் 189 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 30 வயதுக்கு குறைவான பெண் ஒருவரும் 60 வயதுக்கு குறைவான 34 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 154 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 140 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 62 ஆயிரத்து 767 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 3 ஆயிரத்து 308 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் 3 இலட்சத்து 84 ஆயிரத்து 557 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 68 ஆயிரத்து 70 பேர்  தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: