இலங்கையில் இரண்டு இலட்சத்தை எட்டும் கொரோனா தொற்றாளர்கள் – கடந்த 3 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு என சுகாதார தகவல்கள் சுட்டிக்காட்டு!

Saturday, June 5th, 2021

இலங்கையில் தொடர்ச்சியாக கடந்த 3 நாட்களில் நாளாந்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 3000 ஐ கடந்திருந்தது பதிவாகிவரகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில்  3 ஆயிரத்த 410 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.

இதில் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய 12 பேருக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புத்தாண்டு கொத்தணி, திவுலுபிட்டிய, பேலியகொட, சிறைச்சாலை ஆகிய கொத்தணிகளில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 92 ஆயிரத்த 584 ஆக அதிகரித்துள்ளது.

புத்தாண்டு கொத்தணியில் 94 ஆயரத்து 65 பேரும், பேலியகொட கொத்தணியில் 82 ஆயிரத்து 785 பேரும், சிறைச்சாலை கொத்தணியில் 6 ஆயிரத்து 13 பேரும், திவுலபிட்டிய கொத்தணியில் 3 ஆயிரத்து 59 பேரும் இதுவரையில் அடையாளம் காணப்பட்டனர்.

இவ்வாறு இலங்கையில் மொத்தமாக கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 99 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலைமையில் 33 ஆயிரத்து 317 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி தொடர்ந்தும் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.

அதேநேரம் கடந்த 24 மணிநேரத்தில்  ஆயிரத்த 884 பேர் கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறினர். இதன்படி குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 281 ஆக உயர்வடைந்துள்ளது.

இது இவ்வாறிருக்க கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயித்து 656 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: