இலங்கையிடம் எந்தவிதமான திட்டமும் இல்லாதிருந்த போது இந்தியா மட்டுமே ஒரே பங்காளியாக இருந்தது – இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவிப்பு!

Saturday, September 3rd, 2022

நெருக்கடியான நிலையில் நாடு சர்வதேச நாணய நிதியத்தை, அணுகுவதற்கு அண்டை நாடான இந்தியா அளித்த ஆதரவுக்கு இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இந்த நன்றியை வெளியிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை வந்துள்ள நிலையில், மேலும் பல நாடுகள் உதவிகளை வழங்கும் என இலங்கை எதிர்பார்ப்பதாக மொரகொட குறிப்பிட்டார்.

நெருக்கடி வேளையில் இந்தியா மட்டுமே இலங்கைக்கு பங்காளியாக செயற்பட்டது என்றும் அவர் எடுத்துரைத்தார்.

முக்கிய உண்மை என்னவென்றால், சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் அளவிலான ஒப்பந்தம் இலங்கைக்கு நம்பிக்கை அளிக்கிறது. பணம் பெரியதாக இல்லை,ஆனால் அது இலங்கைக்கு நம்பிக்கையை அளிக்கிறது.

இந்தநிலையில் ஜப்பான் போன்ற முதலீட்டாளர்கள், இலங்கைக்கு வரக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல ஊக்கப்படுத்திய இந்தியாவுக்கு, இலங்கை நன்றி கூறுகிறது.

அதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் பங்கு வகித்தனர்.

இலங்கையிடம் எந்த விதமான திட்டமும் இல்லாமல் இருந்த போது இந்தியா மட்டுமே ஒரே பங்காளியாக இருந்தது என்று அவர் மேலும் கூறினார்.

இந்தநிலையில் துறைமுக நகரமான திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துவது குறித்து இந்தியா ஆராய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: