இலங்கைக்கு வரும் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்!

Sunday, July 10th, 2016

அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என செய்திகள் தெரிவித்தள்ளன.

பிஸ்வால், இலங்கை மற்றும் பங்களதேஷிற்கு பயணங்களை மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்க மாநிலத்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த பயணத்தில், தெற்காசியாவின் பிரதி உதவி செயலாளர் மென்பிரிட் சிங்கும் கலந்து கொள்ளவுள்ளார். இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்பு, ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் குறித்து சிரேஸ்ட அரச அதிகாரிகள், அரசியல் தலைவர்களுடன் நிஷா பிஸ்வால் கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் ஐந்தாவது பயணம் இதுவாகும்.

Related posts:


கடும் சுகவீன முற்றுள்ள தோழர் இராசகிளியின் தந்தையாரை பார்வையிட டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதி நே...
தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாகக்கூறி நிதி மோசடியில் ஈடுபடுவோரிடம் சிக்க வேண்டாம் - வெளிநாட்டு வேலைவ...
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – நாடாளுமன்றில் ஜனாதிபதி ரணில...