இலங்கைக்கு பென்ஸ் அம்புலன்ஸ் வண்டிகள்!

Tuesday, July 24th, 2018

ஒஸ்ரிய அரசாங்கத்தின் இலகு கடன் அடிப்படையில் பென்ஸ் வகையை சேர்ந்த 100 அம்புலன்ஸ் வண்டிகளை முதற்கட்டமாக இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
பென்ஸ் வகையை சேர்ந்த 20 அம்புலன்ஸ் வண்டிகளை அரச வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இரண்டாம் கட்டமாக மேலும் 100 அம்புலன்ஸ் வண்டிகள் தருவிக்கப்படும். அரசாங்கம் கட்டளையிட்ட 250 அம்புலன்ஸ் வண்டிகள் எதிர்காலத்தில் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
அனைத்து ஆரம்ப சுகாதார பிரிவுகளுக்கும் அவசர சிகிச்சை பிரிவொன்றும் சகல வசதிகளுடன் கூடிய இரண்டு வோட் தொகுதிகளும் ஒரு அம்புலன்ஸ் வண்டியும் வழங்கப்படவுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.
இதற்கு மேலதிகமாக இந்திய நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவையும் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்ததக்கது.

Related posts: