இராசவீதியோரம் குவிக்கப்பட்டுள்ள கற்களால் பயணிகளுக்கு இடையூறு – விபத்துக்களைத் தடுக்க உடன் நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை!

Thursday, January 17th, 2019

கோப்பாய் இராச வீதியில் வீதித் திருத்தத்துக்காகப் பறிக்கப்பட்டுள்ள கற்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குவிக்கப்பட்டுள்ள கற்களால் நேற்றிரவும் விபத்தொன்று நடந்துள்ளது. அதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இராசபாதையின் இரு புறங்களிலும் வீதித் திருத்தத்துக்காக கற்கள் பறிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் குவிக்கப்பட்டுள்ள கற்கள் வீதிக்குள்ளாகவும் காணப்படுகின்றன.

அந்தப் பகுதியில் வீதியோர மின் விளக்குகள் குறைவாகக் காணப்படுவதால் இரவில் வீதியால் பயணிப்போர் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஏனைய வாகனங்களுக்கு வழிவிடும் போது கற்களுடன் மோதி விபத்துக்குள்ளாக வேண்டியுள்ளது என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவரும் கல் குவியலில் மோதி விபத்துக்குள்ளாகினார். அவர் நோயாளர் காவு வண்டி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இந்த விடயம் தொடர்பில் உரியவர்கள் உடன் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதேச மக்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: