இரண்டு காலாண்டுகளுக்கு தேவையான மருந்துவகைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரண பட்டியல் தயார் – இந்தியா, சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பு என சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, February 17th, 2022

நாட்டில் அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு தேவையான மருந்துவகைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரண பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்தியாவினால் நன்கொடையாக 100,000 அன்டிஜன் உபகரணங்கள் வழங்கப்படும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

110 மில்லியன் ரூபா பெறுமதியான அன்டிஜன் உபகரணங்கள் இவ்வாறு இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் இதனை கையளித்தார்.

தட்டுப்பாடின்றி மருந்துகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக இந்தியாவிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு தேவையான மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரண பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து அவற்றைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக நாட்டு மக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை எவ்வித தட்டுப்பாடுமின்றி வழங்க எதிர்பார்த்துள்ளதோடு, இதற்காக அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: